×

2வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 200 சரிவு..

 

தங்கம் விலை நேற்று  யாரும் எதிர்பாராத விதமாக சவரனுக்கு ரூ. 760 வரை குறைந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சவரனுக்கு 200 ரூபாய் வரை சரிவை சந்தித்திருக்கிறது.  
 
தங்கம் விலை பொதுவாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது என்பது இயல்பான ஒன்றுதான்.. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை உயர்வதும், குறைவதுமாக இருக்கும்.  அந்தவகையில் கடந்த 10 ஆம் தேதி ரூ.38,200க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், 11ம் தேதி  அடிரடியாக சவரனுக்கு ரூ.480  வரை அதிகரித்து  ரூ.38,680க்கும் விற்கப்பட்டது.  இந்த விலையேற்றம்  இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   இதனையடுத்து சற்றும் எதிர்பாராத விதமாக, நேற்றைய தினம்  சவரனுக்கு , ரூ.760 வரை  குறைந்தது.  நேற்று ஒரு சவரன்  ரூ. 37, 920 க்கு விற்பனையானது.  

இந்த நிலையில் இன்று  2வது நாளாக தங்கம் விலை சவரன் ரூ.200 குறைந்திருக்கிறது.   அதன்படி சென்னையில் இன்று தங்கம்  விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,715க்கும், 8 கிராம் கொண்ட  ஒரு  சவரன்  ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.37,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   அதேபோல் வெள்ளி விலை மாற்றமின்றி  விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.66 க்கும்,  1 கிலோ வெள்ளி 66,000  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவுக்கு பணவீக்கமே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த மாத இறுதி வரை தங்கம் விலை குறைந்து காணப்படும் என்றும் கூறப்படுகிறது.