×

ஈரோட்டில் போட்டியிட்டு 20,000 ஓட்டு வாங்க முடியுமா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வ

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளராக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜக விவசாய அணி தலைவர் ஜிகே நாகராஜ் பெயரும் பரிசீலனையும் இருப்பதாக தெரிகிறது. 

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிடும்படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் சவால் விடுத்துவருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.இளங்கோ போட்டியிட்டார். அந்த தேர்தலில் அண்ணாமலை 68 ஆயிரத்து 553 ஓட்டுகள் பெற்று தோல்வியை தழுவினார்

இந்நிலையில் பாஜகவில் இருந்து அண்மையில் நீக்கம் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு, “5 மில்லியன், 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருந்தா தான் பேட்டி கொடுப்பேன் என்று சொல்லும் கர்நாடக வளர்ப்பு மகன் ஈரோட்டில் போட்டியிட்டு 20,000 ஓட்டு வாங்க முடியுமா? டெபாசிட் வாங்கினா நான் அரசியல் பேசுவதை நிறுத்திவிடுகிறேன். என்ன கர்நாடக வளர்ப்பு மகன் தயாரா?


குமுதம் பெரிய சேனல் இல்லை என்று சொல்லி அவரது சொந்த கரூர் மாவட்ட சார்ந்தவர் வரதராஜன் சாரை அவமானப்படுத்தினார். தன் சொந்த கட்சி மக்களைக் கூட இப்படித்தான் மதிக்கிறார். மரியாதை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும், பின்னர் பயன்படுத்தி எறிவார். போக போக அனைவரும் உணருவார்கள்” எனக் கூறியுள்ளார்.