×

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  - கால அவகாசம் நீட்டிப்பு!

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதையடுத்து கலை,அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கினர். இருப்பினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானது. இதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் ஜூலை 22ஆம் தேதி வெளியானது . இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் 5 நாள்கள் நீட்டித்தது. 

அத்துடன் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை சுமார் 4 லட்சம் பேர்  விண்ணப்பப்பித்துள்ளனர். இதன் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும்  கால அவகாசத்தை சென்னை பல்கலைக்கழகம் நீடித்துள்ளது. 


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில், "நடப்பு கல்வியாண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்கள் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி தேவையான நாட்களுக்கு வகுப்புகளுக்கு வருகை தரும் பட்சத்தில் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவாார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.