×

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமாகிய திருமகன் ஈவெரா, கடந்த 7 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46. இவர் 2021 ஆம் ஆண்டுதான் முதன்முறயாக சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.  தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறையின் தலைவராக இருந்துள்ளார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4 ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸின் கட்சியின் பலம் 18ல் இருந்து 17 ஆக குறைந்தது . திமுக கூட்டணியின் பலம் 154 இல் இருந்து  153 ஆக குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன்  ஈவேரா மறைவு குறித்து சட்டப்பேரவைச் செயலகம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரியபடுத்தியுள்ளது. இந்த தகவலை  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு  ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.