×

உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது- செந்தில் பாலாஜி

 

இந்தியாவிலே மிக மிக குறைவாக மின் விலை நிர்ணயக்கபட்டு, வசூலிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை வடக்கு பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் செயல்படும் மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகங்களில் பணிபுரியும் அலுவலகர்களுடனான சிறப்பு ஆய்வு கூட்டம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. சென்னை மாதவரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வடக்கு மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி சேகர், கே.பி.பி.சங்கர் மற்றும் எபிநேசர் ஆகியோருடன் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்துவதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளில் 60 சதவீத பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின் கணக்கீட்டில் புதிய கட்டணம் அமுலுக்கு வந்த நாளில் இருந்து புதிய கட்டணமும், அதற்கு முன்பான நாட்களுக்கு பழைய கட்டணமும் வசூலிக்கப்படும். மின் உற்பத்திக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே அதிக வேறுபாடு. அந்த வேறுபாடுகளை குறைக்கும் வகையில் புதிய கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகமாக உள்ளதென சிறுகுறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன் பேரில், உத்தேசிக்கப்பட்ட தொகையை விட குறைவான அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல், கர்நாடகா உள்ளிட்ட 14 மாநிலங்களில் மின் கட்டணம் உயர்ந்தபட்டுள்ளதாகவும் இந்தியாவிலே மிக மிக குறைவான மின் விலை நிர்ணயக்கபட்டு, வசூலிக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான். 

கடந்த சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட 316 புதிய துணை மின் நிலையங்களுக்கு, 242 மின் நிலையங்கள அமைக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 62 சதவீதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சியில் 24 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.