×

கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் குடித்த குழந்தைகள் உள்ளிட்ட 18 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

ஆரணி அருகே நிலத்தில் வேலை செய்த குழந்தை உட்பட 18 பேர் ஜூஸ் குடித்ததால் வாந்தி, மயக்கம், வயிற்கு போக்கு ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகின்றன. இதனால் விவசாய நிலத்தில் தற்போது நாட்டுநடவு உள்ளிட்ட விவசாய பணிகள் நடைபெறுவது வழக்கம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மலையம்பட்டு கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரின் நிலத்தில் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 24 பெண்கள் நாட்டுநடவு பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது மதியம் வேலை நேரத்தில் களம்பூர் பேரூராட்சியில் உள்ள உள்ளுர் ஜூஸ் கடையிலிருந்து ஜூஸ் வாங்கி வந்து நாட்டு நடவு பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு கொடுத்துள்ளனர். 

இதனையொடுத்து இன்று விடியற்காலை மற்றும் காலையில் நிலத்தின் உரிமையாளர் குமரேசன், நிலத்தில் நடவு பணி செய்த சிவரஞ்சினி, தமிழ்செல்வி, மஞ்சுளா, கன்னியம்மாள், பூங்காவனம், ரேவதி ஜெயா, மகாலட்சமி, சஞ்சய் (9) , பிரித்தி(13), விஜயலட்சுமி உள்ளிட்ட 18 பேருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுபோக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து அனைவரும்  மலையம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக ஆரணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.  இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.