×

ஈரோடு கிழக்கு தொகுதி இடத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டி?

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள இளங்கோவன்தான் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி விட்டனர். இளங்கோவன் மனதளவில் இன்னும் பாதிப்பில் இருந்து மீண்டு வராததால் இன்னும் போட்டியிடும் மனநிலைக்கு வரவில்லை. ஆனால் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அனைத்தும் இளங்கோவன்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. தி.மு.க. தலைமையும் இளங்கோவன்தான் சரியான வேட்பாளராக இருக்க முடியும் என்று கருதுகிறது. தொகுதியில் பிரபலமானவர். தனிப்பட்ட செல்வாக்கு உடையவர். இப்போது மகனை இழந்திருப்பதால் அனுதாபமும் இருக்கும். எனவே வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.  இளங்கோவனை பொறுத்தவரை கட்சி எடுக்கும் முடிவை பொறுத்து தனது முடிவையும் மாற்றிக்கொள்வார்

 என எதிர்ப்பார்க்கப்படுகிறது.