×

தீபாவளி பண்டிகை - அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! 

 

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய விசேஷ தினங்களில் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வர் .அதேபோல் பண்டிகை தினங்கள் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் சென்னையில் வந்தடைவர். இதற்காக அரசு சார்பில் பேருந்து அதிக அளவில் இயக்கப்படும்.  அதே சமயம் சொந்த ஊருக்கு மக்கள் செல்லும் போது கடைசி நேரத்தில் பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாவர்.  இந்த சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் டிக்கெட்டுகளை அதிக விலையை விற்று வருகிறது. மக்கள் வேறு வழியில்லாமல் அதிக விலையில் டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாகத்தான் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

அந்த வகையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்  வெளியூர் செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அக்டோபர் 21ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்றும், அக்.22, 23 தேதிகளில் பயணம் செய்ய நாளை, நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.