×

அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதாக வந்தால் ஒழுங்கு நடவடிக்கை

 

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தாமதாக வந்தால் இனி ஒழுங்கு நடவடிக்கை என துறை செயலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள் தங்கள் துறைகளில் திடீரென்று ஆய்வு செய்து ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருகிறார்களா? பணி நேரத்தில் இருக்கிறார்களா? என்பதை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புதுவை அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அரசின் சிறப்பு செயலர் கேசவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், பணி நேரத்தில் இருக்கையில் இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள் தங்கள் துறைகளில் திடீரென்று ஆய்வு செய்து ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருகிறார்களா? பணி நேரத்தில் இருக்கிறார்களா? என்பதை ஆராய வேண்டும்.

ஆய்வுக்கு பின் எத்தனை அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை மாதந்தோறும் சமர்பிக்க வேண்டும். இதேபோல் நிர்வாக சீர்த்திருத்ததுறையும் திடீர் ஆய்வில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.