×

ரயில்வே தேர்வில் ஆந்திராவில் தேர்வு மையங்கள்- தினகரன் கண்டனம்!!

 

ரயில்வே தேர்வில் ஆந்திராவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலருக்கு ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 3,769 காலிடகை நிரப்ப குரூப் டி தேர்வு மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்வு வடமத்திய ரயில்வே, வடமேற்கு ரயில்வே , தென்கிழக்கு மத்திய ரயில்வே ஆகியோற்கான இரண்டாவது கட்டத் தேர்வு அல்லது 26 ஆம் தேதி முதல் தொடங்கி  நடந்து வருகிறது. தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே ,வடகிழக்கு எல்லை ரயில்வே கிழக்கு கடற்கரை ரயில்வே ஆகியவற்றிற்கு மூன்றாவது கட்ட தேர்வு வரும் 8ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த  பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில்வே தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் இதுவரை சரிசெய்யப்படாதது கண்டனத்திற்குரியது.  ரயில்வே தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இங்கேயே தேர்வு மையங்களை ஒதுக்கிட ரயில்வே அமைச்சகம்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.