×

தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க ஆளுநர் ரவி முயற்சிக்கிறார்!!

 

நடப்பாண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த9 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு அச்சுட்டு தந்த சில பகுதிகளை படிக்காமல் ஆளுநர் தவித்தார் .தமிழ்நாடு ,திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு ,முதலீடு தொடர்பான பத்தியை ஆளுநர் படிக்கவில்லை.  அதேபோல தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா,  காமராசர் , கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் படிக்காமல் தவித்தார்.  இறுதியில் ஆளுநர் உலகில் இல்லாத ஜெய்ஹிந்த் இந்த வார்த்தையை ஆளுநர் பயன்படுத்தினார்.

இதையடுத்து சட்டசபையில் பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின் , ஆளுநரின் இந்த செயலுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதுடன் , தமிழக அரசு அச்சிட்டு  தந்த வாசகங்கள் அல்லாமல் ஆளுநர் தானாக படித்தவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து  ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பேசும் பொருளானது. இதையடுத்து சட்ட நிபுணர்கள், திமுக சட்ட பிரிவினர் ,மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு .க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி ஆளுநர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சந்தித்தது.  முதல்வரின் சீலிடப்பட்ட கவரை   குடியரசு தலைவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்படைத்துள்ளனர். அரசியல் சாசனத்தை மீறி தமிழக ஆளுநர் செயல்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் ரவிக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. டி.ஆர். பாலு முதல்வரின்  சீலிடப்பட்ட கவரை  குடியரசு தலைவரிடம் கொடுத்தோம்.  ஆளுநரின் பேரவை உரை குறித்து குடியரசு தலைவரிடம் விளக்கினோம். குடியரசு தலைவரை சந்தித்ததால் மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்திப்பதற்கான அவசியமில்லை.  தமிழக ஆளுநர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவரிடம் வலியுறுத்தினோம். குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட ஆளுநருக்கு எதிரான மனுவில் உள்ள விஷயங்கள் முதல்வருக்கு தான் தெரியும் . தமிழகத்தில் சனாதன கொள்கையை திணிக்க ஆளுநர் ரவி முயற்சிக்கிறார். தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்புவோம்  என்றார்.