×


டிச.16ல் 100 இடங்களில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் - திமுக அறிவிப்பு

 

திமுக சார்பில் டிச.16ம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டங்கள் 100 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் 01-12-2022 அன்று சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற ‘தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்’ "முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட இந்தக்கூட்டம் தீர்மானிக்கிறது.” என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் வருகிற 16.12.2022 (வியாழக்கிழமை) அன்று இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டங்கள்” நடைபெறும் இடங்கள், பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியல் தலைமைக் கழகத்தின் சார்பில் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றது.