×

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திக்கு நெருக்கடி.. ரூ. 12 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு.. 

 

 கட்டுமான ஒப்பந்ததாரரும்,  எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது  கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு பெருநகர வளர்ச்சி குடும்பத்தின் கீழ் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு செய்ததாகவும், பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் 12 கோடி ரூபாய் லஞ்சத்தை ராமலிங்கம் கொடுத்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சம்மந்தி ராமலிங்கம் மகன்  தொடர்புடைய 7  போலி நிறுவனங்கள் மூலம் லஞ்ச பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில் தற்போது  அப்படி கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் எடியூரப்பா மகனும்,  பாஜக மாநில துணை தலைவருமான விஜேந்திராவுக்கு சென்று சேராதது தொடர்பான தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே முடித்த ஒப்பந்த பணிகளுக்கான தொகையை வழங்க மேலும் 12 . 5 கோடி லஞ்சம் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  லஞ்சம் பேரும் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சம்பந்தி ராமலிங்கமும் , எடியூரப்பாவின் பேரன் சசிதரன் ஆகியோர் பேசிய தொலைபேசி உரையாடல் வெளியானது.

தொலைபேசி உரையாடல் மற்றும்  ஏற்கனவே தரப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது   துறை சார்ந்த வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கர்நாடகாவில் முக்கிய அரசு ஒப்பந்ததாரராக உள்ள ராமலிங்கம் மீது  ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன்  தமிழ்நாட்டிலும்  பல்வேறு அரசு பணி ஒப்பந்தங்கள் விதிகளை மீறி இராமலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக  புகார்கள் இருந்து வருகின்றன. தற்போது 12 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்திருப்பதால் எடப்பாடி சம்பந்தி ராமலிங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு பெருநகர வளர்ச்சி குடும்பத்தின் கீழ் ரூ. 666.22 கோடி மதிப்பில்  புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கான  ஒப்பந்தம் வழங்கக்கோரி ரூ. 12 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.