×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு செப்.8-ம் தேதி விடுமுறை

 

கேரள மக்கள் கொண்டாடி வரும் திருவிழாக்களில் மிக முக்கியமானது ஓணம் பண்டிகை. 

ஒவ்வொரு ஆண்டும் மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஓணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாகி, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவது வழக்கம்.  அஸ்தம், சித்திரை, சுவாதி ஆகிய மூன்று நட்சத்திர தினத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும்,  உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.