×

கோவை கார் வெடிப்பு - கண்காணிப்பு வளையத்தில் 30 பேர்

 

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளதாகவும், 3 முதல் 4 பேரை தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.


கடந்த மாதம் 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் முன்பாக கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  இதில் ஜமேசாமுபீன் என்பவர் உயிரிழந்தார். சந்தேகத்திற்கிடமாக நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சார்பில்தனிப்படைகள் அமைத்து 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர். இதனையடுத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு டிஐஜி வந்தனா, எஸ்.பி.ஸ்ரீஜித் மற்றும் விசாரனை அதிகாரி விக்னேஷ் உள்ளிட்டோர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர் தொடர்ந்து அதனை என் ஐ ஏ விசாரணை செய்ய பரிந்துரைத்தனர்.  அந்த வழக்கை தற்பொழுது என் ஐ ஏ விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், “கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள், பென் டிரைவ்-ல் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளோம். 3 முதல் 4 பேரை தீவிரமாக கண்காணித்துவருகிறோம்” எனக் கூறினார்.