அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா!!
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. அதேபோல் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 371 பேராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு தொடர்கதையாகியுள்ளது சகா மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.