×

உயிரிழந்த கள்ளகுறிச்சி மாணவியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் காரணமாக  கடந்த 17 ஆம் தேதி கலவரம் வெடித்தது. 

இந்த கலவரச் சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசாரும், அதேபோல கலவரச் சம்பவம் தொடர்பாக விசாரணையை தமிழக காவல் துறையால் டி.ஐ.ஜி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.  பள்ளி வகுப்பறை மற்றும் போராட்டக்காரர்கள் அடித்து உதைத்து தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறைகள் ஆய்வகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி அறைகளில் அதிநவீன 3D ஸ்கேனர் வைத்து பள்ளி வளாகம் முழுவதும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாலியல் தாக்குதல் ஏதும் நடந்திருந்தால், அதுகுறித்து உடற்கூறாய்வின் வீடியோ பதிவில் அறிய முடியுமா என்ற நீதிபதி கேள்விக்கு, அறிய முடியும் என மருத்துவர் செல்வக்குமார் பதிலளித்துள்ளார். இரண்டு முறை நடைபெற்ற உடற்கூறாய்வு முடிவுளையும் ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் சித்தார்த் தாஸ், பேராசிரியர் குஷா குமார் சாஹா, கூடுதல் பேராசிரியர் அம்பிகா பிரசாத் பட்ரா ஆகியோர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை கேட்டு அந்த நீதிமன்றத்தில் உரிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்யலாம். ஜிப்மர் குழுவின் இறுதிக் அறிக்கையை பொருட்படுத்தாமல், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் என்றும், அறிக்கையை ஜூலை 29ல் தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தாவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது