×

வணிக வரித்துறையில் "எனது விலைப்பட்டியல் எனது உரிமை" திட்டம் - அரசாணை  வெளியீடு!!

 

பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப்பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிக வரித்துறையில் "எனது விலைப்பட்டியல் எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித் துறையில் 'எனது விலைப் பட்டியல் - எனது உரிமை' என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியல்களை பொதுமக்கள் கேட்டுப் பெற்றால் மட்டுமே அரசுக்கான வரி வருவாய் விடுதலின்றி கிடைக்க ஏதுவாகும். எனவே, இதனை ஊக்குவிப்பதற்காக வணிகவரித் துறையில் 'எனது விலைப் பட்டியல் - எனது உரிமை' என்ற திட்டம் செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தாங்கள் பெறும் விலைப்பட்டியல்களின் ஒளிநகல்களை வணிகவரித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுவார்கள். காலமுறை அடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதற்காக தொடர் செலவினமாக ரூ.1.22 கோடி மற்றும் தொடரா செலவினமாக ரூ.30.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.