×

#JUSTIN கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

 

கோவையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் தூய்மை பணியாளர்களின் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

கோவை மாநகராட்சியில்  தனியார் மூலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அரசு நிர்ணயித்த தின சம்பளம் வழங்கப்படு, வதில்லை என்றும் இதனால் அரசு நிர்ணயித்த  தின சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தம் செய்தனர். 

இதை தொடர்ந்து  மேயர் கல்பனா , மாநகராட்சி ஆணையர் பிரதாப் உடன் 9தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இந்நிலையில் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களின் ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து பரிசீலனை செய்யப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ள நிலையில் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.