×

#BREAKING அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல்!!

 

தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் பள்ளி கல்வித்துறை நடத்த என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் தற்போது எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு , மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு எல்கேஜி யூகேஜி  வகுப்புகள் தொடங்கப்பட்டன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து வந்த நிலையில் அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டது. இது  கிராம புறங்களில் இது மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் இடைநிலை ஆசிரியர்கள்,  மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட தற்போது மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டது.   இதன் பின்னர் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் குறித்த முழுமையான வரையறைகள் வெளியாகவில்லை.இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும் என அறி கோரிக்கை எழுந்தது.

தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதால்  இந்த முடிவினை எடுத்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.