×

புகழ்மாலைகள்  குவியட்டும் -எழுத்தாளர் இமையத்திற்கு முதல்வர் வாழ்த்து
 

 

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

நவீன கன்னட இலக்கியத்தில் ஆகப்பெறும் ஆளுமை குவெம்பு என்னும் கேவி புட்டப்பா.  மைசூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர்.  ஞானபீட விருது பத்ம விருதுகளான பூசன் விருதுகளை பெற்றவர்.  அவர் பெயரில் சிமோகாவில் பல்கலைக்கழகம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.   கன்னட தேசிய குவெம்பு விருது இந்த ஆண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.