×

 தொழில் வளர்ச்சியில் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது தமிழகம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..

 

தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் டைடல் பூங்கா வளாகத்தில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 15 மாதங்களில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது. உயர் கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி காண முடியும். தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல தொழில் வளர்ச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளும் தமிழ்நாட்டுக்கு பலன் தரும் மாநாடுகளாக அமைந்துள்ளன.

4ம் தலைமுறை தொழில் வளர்ச்சி, தொழில்நுடப வளர்ச்சிக்கு தயார்படுத்தி கொள்ள தமிழக அரசு திட்டம் தீட்டி அமல்படுத்துகிறது. 4ம் தலைமை தொழில் வளர்ச்சிக்கான, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திறன்மிகு மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகின்றன. உற்பத்தித்துறை, மட்டுமின்றி சேவை துறையும் ஒன்றாக இணைந்து வளர்ந்தால் தான் அதி அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி. ஹச்சி எல் நிறுவனத்தின் விமான தயாரிப்புக்கான உதிரி பாகங்கள், உபகரணங்கள், தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகின்றன. டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள், அனைத்துத்துறையில் பயன்படுத்தப்படுகின்றன. டிரோன்களை இயக்கம் ரிமோட் பைலட்டுகளுக்கான பயிற்சி மையங்கள் மதுரை உள்ளிட்ட இடங்களில் அமையும்.

மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற அடிப்படையில் பயிற்சியளிக்கப்படும். கிராமப்புற இளைஞர்கள் ஆளில்லா விமான விமானிகளாக உலகை வலம்வர இயலும். நாட்டிலேயே முதல் திறன்மிகு மையம், தரமணியில் திறக்கப்பட்ட்டுள்ளது. 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது. உலகளவில் தமிழ்நாடு கவனம் ஈர்த்துள்ளது” என்று தெரிவித்தார்.