×

குடியரசுத் தலைவர் முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

 

இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள   திருமதி. திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார் திரெளபதி  முர்மு.  புதிய குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா. நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து பதவியேற்பில் விழாவில் பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 75-வது சுதந்திர தின வருடத்தில் குடியரசு தலைவராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி. நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் புனித நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குகிறேன். உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும் .கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடே வாக்குகள். குடியரசுத் தலைவராக இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக பணியாற்றுவேன். எனது குடியரசுத் தலைவர் பொறுப்பு, ஏழைகள், பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்றார்.
 

இந்நிலையில் இந்தியா திருநாட்டின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுள்ள நிலையில்   முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில், "இந்தியக் குடியரசுத் தலைவராகத் பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.