×

ஆழ்க்கடலில் செஸ் விளையாடி அசத்திய ஆழ்க்கடல் நீச்சல் வீரர்கள்!

 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதமாக ஆழ்க்கடலில் செஸ் விளையாடி அசத்திய ஆழ்க்கடல் பயிற்சியாளர் குழுவினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ. ஆழ்க்கடல் பயிற்சியாளரான இவர், பல்வேறு சுற்றுச்சூழல் கருத்துகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆழ்க்கடலில் சாதனை புரிந்துள்ளார். இந்த நிலையில் அரவிந்த் தனுஸ்ரீ தற்போது ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

செஸ்  விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தம்பி பொம்மை வேடமிட்டு, வேட்டி சட்டை அணிந்தவாறு, சென்னை நீலாங்கரை கடற்கரைக்கு சென்றார்.


அங்கிருந்து படகில் தனது குழுவினருடன் நடுக்கடலுக்கு சென்ற அரவிந்த் தனுஸ்ரீ,  60அடி  ஆழத்துக்கு சென்று நம்ம சென்னை செஸ் கொடியுடன் செஸ் விளையாடி அசத்தியுள்ளார்.