×

பிரமாண்டமாக தொடங்கியது  44வது செஸ் ஒலிம்பியாட் ..

 
 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலகலமாக தொடங்கியுள்ளது.   

உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி  சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது.  இதற்கான தொடக்கவிழா   நேரு உள்விளையாட்டு அரங்கிள் தற்போது தொடங்கியிருக்கிறது.   இதனையொட்டி சென்னை முழுவதுமே  விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த போட்டி  இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் .  மேலும் மாமல்லபுரத்தில் விளையாட்டு ஏற்பாடுகளுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் முதன் முறையாக நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை, செஸ்பேஸ் இந்தியா என்ற யூட்யூப் சேனல் வாயிலாக மக்கள் நேரடியாக காணவும்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தப் போட்டியில்  187 வெவ்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்  பங்கேற்க உள்ளனர்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட்  போட்டியை  தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில்  தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையையொட்டி சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  எந்த பக்கம் திரும்பினாலும் சர்வதேச செஸ் போட்டி குறித்த விளம்பர பதாகைகளும், சுவர் ஓவியங்களும், காணப்படுகிறது.  தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியிருக்கும் தொடக்க விழாவில், போட்டியில் பங்கேற்கும் நாடுகள் மற்றும் வீரர்களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.