×

செஸ் ஒலிம்பியாட்- அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி.


44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் எட்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 180 நாடுகளில் இருந்து 186 அணியினர் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி.

செஸ் ஒலிம்பியாட் 8வது சுற்றில் வெற்றி பெற்று 8 தொடர் வெற்றிகளை குவித்தார் இந்திய வீரர் குகேஷ். உலக தரநிலையில் 5வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீரர் பாபியோனா கருவானா-வை 45வது நகர்த்தலில் வீழ்த்தினார் குகேஷ். இதேபோல் இந்தியவீரர் பிரக்ஞானந்தா அமெரிக்கா வீரர் வெஸ்லி உடன் மோதி 33 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். இந்தியா ஓப்பன் பி பிரிவில் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அந்நாட்டு வீரர் லிவோன் ஆரோனியன் உடனான ஆட்டம் 35வது நகர்த்தலுக்கு பிறகு சமனில் முடிந்தது. பெரெஸ் டோம்னிகுஸ் உடனான ஆட்டத்தில் 45வது நகர்வுக்கு பிறகு இந்திய பி அணி வீரர் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.