×

சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி

 

சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்தை புறக்கணித்து சமஸ்கிருதத்தில் இறைவணக்க பாடல் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அரசு விழாக்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது மரபாகும். ஆனால் சென்னை ஐ.ஐ.டி நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சமஸ்கிருதம் மொழியில் இறைவணக்க பாடலும் பாடப்பட்டு வந்தது.அத்துடன் பட்டம் பெரும் மாணவர்கள் தமிழ் மொழியை புறக்கணித்து ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்றுகொள்ள வைக்கப்பட்டனர். சென்னை ஐ.ஐ.டி.-யில் பல முறை தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனமும் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின்போது, தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இதுகுறித்து விரைவில் சென்னை ஐஐடி அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனகடந்த டிசம்பர் மாதம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலால தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடதக்கது.