×

#Breaking சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!!

 

சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு ஆண்டு தேர்வு இரு பருவங்களாக நடத்தப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை மாதம் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவ தேர்வு நடைபெற்றது.  இதற்கான முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.  இதையடுத்து இரண்டாம் பருவத் தேர்வுகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று சொல்லப்பட்டது.


அதேசமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களாக இருப்பினும், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களாக இருப்பினும்,  தனிமைப்படுத்திக் கொண்ட மாணவர்கள்,  கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருந்த மாணவர்கள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களாக இருப்பின்  ஏதேனும் ஒரு அமர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இத்தேர்வு எழுதியவர்களில் ஒட்டுமொத்தமாக 94.40% தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையில் 98.97%  தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ  10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.  இன்று காலை சிபிஎஸ்இ  12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.