×

# Breaking:  உயர்சாதியினருக்கு  10% இட ஒதுக்கீடு -  4 வகையான தீர்ப்பளித்தது  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு..

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் . 4 நீதிபதிகள் ஆதரவாகவும், ஒரு நீதிபதி எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர்.  

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 4 விதமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  அதன்படி, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் ஒரு தீர்ப்பையும், மற்ற 3 நீதிபதிகள் 3 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளனர்.  இதில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தீர்பளித்திருக்கின்றனர்.  

அதாவது, 10% இடஒதுக்கீட்டில் இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை, அரசியலமைப்பை மீறவில்லை, 50% உச்ச வரம்பு என்பதை 10% இட ஒதுக்கீடு மீறவில்லை என நீதிபதி தினேஷ் மஹேஸ்வரி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரி என்று அவர்   தீர்ப்பு வழங்கி உள்ளார்.  அதேபோல்,  சமூகம், கல்வியில் பின்தங்கியவர்கள் முன்னேறுவதாகவே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இட ஒதுக்கீடு பயன்படுகிறது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் மற்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம் திரிவேதி ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.  

அரசியலமைப்பின் 103வது திருத்தச் சட்டம் 2019 இன் படி இது  செல்லுபடியாகும், இது பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்குகிறது. பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத EWS இடஒதுக்கீட்டை வழங்கும் அரசியலமைப்பு 103வது திருத்தச் சட்டம் 2019இன் செல்லுபடியாகும் என்று   நீதிபதி ஜேபி பார்திவாலாவும் தீர்ப்பளித்துள்ளார்.   மேலும், 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என 4 நீதிபதிகள் தீர்ப்பளித்த நிலையில், ஒரு நீதிபதி எதிராக தீர்ப்பளித்திருக்கிறார்.  10 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிபதி ரவீந்திர பட் மட்டும் எதிரான  தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.