×

நாளை நடைபெறவிருந்த வங்கிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

 

வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை இருக்கும் வங்கிகளுக்கு மாற்றாமல் சில வங்கிகள் ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது. இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல் செயல் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்திருந்தது. அதேபோல் 240 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. 


இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில், வேலை நிறுத்தம் செய்வதற்காக வங்கி யூனியன் சங்கம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை அடுத்து கடந்த ஐந்தாம் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் பேச்சுவார்த்தை எட்டப்படாத நிலையில், நாளை நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் முடிவு செய்திருந்தது. 

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின்  தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார்.