×

பாலமேடு ஜல்லிக்கட்டு  - மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழப்பு.. 

 

பாலமேடு ஜல்லிக்கட்டில், 9 காளைகளை பிடித்த  சிறந்த மாடுபிடி வீரர்  அரவிந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி , விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   4 சுற்றுகள் முடிவடைந்த போது   16 காளைகளை பிடித்து மணி  முதலிடத்திலும், 11 களைகளை அடக்கி ராஜா 2 வது இடத்திலும்,  அரவிந்த், வாஞ்சிநாதன் ஆகிய இருவரும் தலா 9 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் இருந்தனர். இதில் 9 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக விளங்கிய  அரவிந்த்,  மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.  3வது இடத்தில் இருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் மாடு குத்தியதில், குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு  கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி  அரவிந்த் உயிரிழந்துள்ளார்.  இதேபோல் 4 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 19 பேர் 4வது சுற்றின் முடிவில்  காயமடைந்தனர்.  இதில் 5 பேர் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.