×

உதவி கேட்டு வந்த இளம் விதவைப் பெண்ணை நாசம் செய்த அமைச்சர்- பாஜக சாடல்

 

உத்தமவேடதாரி மனோதங்கராஜ், ஊருக்கு உபதேசம் செய்யலாமா.? என பாஜக மாநில மகளிர் அணித் தலைவி உமாரதி ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவுக்கு பெண்கள் பற்றி பேச என்ன தகுதி என்று கேட்டிருக்கும் திரு.மனோ தங்கராஜ் அவர்கள் பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது கன்யாகுமரி மாவட்டத்திற்குத் தெரிந்த செய்தி.

சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரிலே, அமைச்சர் மனோ தங்கராஜிடம் உதவி கேட்டு வந்த இளம் விதவைப் பெண்ணை, தன் சாகசவலையில் வீழ்த்த நினைத்த சம்பவத்தின் ஆதாரங்கள் எல்லாம் வலைதளங்களில் இன்னும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. பெண்மையை கேவலப்படுத்திய சட்ட மன்ற உறுப்பினரை, உதவி கேட்ட பெண்ணை உறவுக்கு அழைத்த மனோ தங்கராஜை, தண்டித்திருக்க வேண்டிய திமுக அரசு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது

இன்னும் சொல்லப்போனால் 2021 ஆம் ஆண்டு இவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தி பல பெண்களும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தியதை தமிழகம் மறந்து இருக்க முடியாது?.

பெண்களுக்காக போராட்டம் நடத்தும் தகுதி, பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்று, திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தன் அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். தன் அறிக்கை மூலம், பெண்களை இழிவு செய்த சாதிக்கின் செயலை. அமைச்சர் நியாயப்படுத்துகிறாரா? தன்னைப்போலவே மகளிரை இழிவு செய்த நபரை வரவேற்கிறாரா? என்ன செய்வது? இனம் இனத்தோடுதானே சேரும்.? கர்மவீர வாழ்ந்த மண்ணில் காமவீர்கள் கூட்டாக களம் காண்கிறார்கள். கன்யாகுமரி மாவட்டத்தின் கரும் புள்ளியாகத் திகழும், மனோ தங்கைய்யா, மகளிருக்காகப் பேசுவது, ஓநாய் அழுகையைப் போன்றது என்று இம்மாவட்ட மகளிர் அறிவார்கள்.

தவறு செய்பவர்களைவிட, அதற்குத் துணை நிற்பவர்களை, அதிகம் தண்டிக்க வேண்டும். என்ன துணிச்சல் இருந்தால், சாதிக் போன்ற நபர் தமிழ்ச் சமூகத்தில் உயர் மதிப்பில் பொற்றப்படும் பெண்களை, கேவலப்படுத்துவாக.. அந்த அவலத்திற்கு தங்கராஜ் போன்ற அமைச்சர்கள் துணை நிற்பார்கள்... இதைக் கண்டிக்க வேண்டிய கட்சித்தலைவரே. ஆட்சித்தலைமையில் இருக்கும் போது கூடுதல் பொறுப்புடன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது கண்டும் காணாததும் போல் இருப்பாரா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.