×

திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?- அண்ணாமலை

 

திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் 
திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஜனவரி 4-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என இருக்க வேண்டும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்கள் என பேசியிருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திராவிட நாடு கோரிக்கை நீர்த்துப் போகவில்லை என்றும் சொந்த நாடு கேட்க எங்களை வற்புறுத்தாதீர்கள் என்றும் பிரிவினைவாத கருத்துக்களை எடுத்துரைக்கும் திமுகவினருக்கு ஆளுநரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்லும் நீங்கள் ஆளுநரின் உரையில் என்ன குறை கண்டீர்? சங்க கால இலக்கியங்களில் தமிழகம், தமிழ்நாடு என்ற இரு சொற்களும் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பது பொருத்தமாக இருக்கும் என்பது தமிழக ஆளுநரின் கருத்து. அதை திமுகவினர் ஏற்க வேண்டும் என்று ஆளுநர் நிர்பந்திக்கவில்லை.