×

அமைச்சர் ‘அல்லேலோயாபாபு’ வாலை சுருட்டிக்கொண்டு இருந்தால் நல்லது- ஹெச்.ராஜா

 

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு தேவையில்லாத இடையூறுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் அளிப்பதாக பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 


      
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தனது குடும்பத்துடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா, சாமி தரிசனத்துக்கு பின் அன்னதானத்தை துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் தரிசிக்க வந்தேன். 14 ஆண்டுகள் நீதி போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் இந்த கோயிலை அரசு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியது. அதனால் அரசியல் சட்ட பிரிவு 26 இன் படி தீட்சிதர்கள் வசம்தான் கோயில் இருக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்து பிரிட்டிஷ் கலெக்டர் தெளிவாக எழுதி இருக்கிறார். தமிழகத்தில் அறநிலையத்துறை, கோயில்களை கொள்ளை அடிக்கிற துறையாக இருக்கிறது.

அமைச்சர் அல்லேலோயாபாபுவான சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு ஏதாவது இடையூறுகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் தனது நிலை அறிந்து வாலை சுருட்டி கொண்டு இருப்பது நல்லது. ஸ்டாலின் மகனே, தான் கிறிஸ்தவன் எனக்கூறி இருக்கிறார். முதல்வர் குடும்பமே கிறிஸ்தவ குடும்பமாக மாறி இருக்கிறது. ரம்ஜானுக்கு, கிறிஸ்துவத்துக்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை. புதிய தலைமுறை நிர்வாகத்தில் யார் இருக்கிறார்? புதிய தலைமுறையில் இருந்த கார்த்திகேயன் இந்து பெண் கடவுள்களை இழிவாக பேசிய பெண் விரோதி. புதிய தலைமுறை தொலைக்காட்சி சரியில்லை” எனக் கூறினார்.