×

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் - டிடிவி தினகரன் வாழ்த்து!!

 

 ஆயுத பூஜை,  விஜயதசமி திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும் வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமாக இறையருளை வேண்டுவோம்.

நேர்மறை சிந்தனைகளை மனதில் இருத்தி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம். உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும் நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதைச் செயலில் காட்டுவோம். விஜயதசமி நாளில் அனைவருக்கும் நலமும் வளமும் நிறைந்திட அன்னை பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.