×

#BREAKING  சொத்துக் குவிப்பு வழக்கு - அமைச்சர் கீதா ஜீவன் விடுவிப்பு

 

சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஆறு பேரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சர் ஆக உள்ளவர் கீதாஜீவன். இவரது தந்தை பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியை காலத்தில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.  இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பெரியசாமி சேர்க்கப்பட்ட நிலையில் அவரது மனைவி எபினேசர்,  அவருடைய மகன்கள் ராஜன் , ஜெகன் மற்றும் கீதா ஜீவனின் கணவர் ஜேக்கப் மற்றும் தற்போதைய அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.  இந்த வழக்கு  நடைபெற்று வந்த நிலையில் பெரியசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு உயிரிழந்தார் . இதையடுத்து இந்த வழக்கினை அவரது குடும்பத்தினர் சந்தித்து வந்தனர்.  வழக்கின் விசாரணை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிந்தது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதாஜீவன், அவரது கணவர், சகோதரர்கள், தாய் உள்ளிட்ட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை  நீதிமன்றம் தீர்ப்பு  வழங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை பெற்றுள்ளோம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நீதி கிடைத்துள்ளது என்றார்.