×

பாவாடை நாடாவை அவிழ்த்து பார்ப்பேன் என சொன்னவர்கள்.... அண்ணாமலை விளாசல்

 

கமலாலயம் வந்தால் மட்டும் செய்தியாளர்களுக்கு துணிச்சல் வந்துவிடுகிறது , திமுக தலைவர் ஸ்டாலினிடம் இதுபோல கேள்வி கேட்பீர்களா? என செய்தியாளர்களை நோக்கி அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “விருகம்பாக்கத்தில் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்கள் பெண் காவலரிடம் தவறாக நடந்த நிலையில் 2 நாட்கள் அவர்கள் மீது  முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை. நேற்று இரவுதான் எப்.ஐ.ஆர். பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தாமதமாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு காவல்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனரா? சென்னை காவல் ஆணையர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். 

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மனித மலம் குடிநீரில் கலக்கப்பட்டுள்ளது , பட்டியலின் மக்களை கோயிலில் அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் கிராமம் சாட்சியாக உள்ளது. முதலமைச்சர் அந்த ஊருக்கு மூத்த அமைச்சர்களை அனுப்பி வைக்கவில்லை. ஆர்கே நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மாநகராட்சி  பணியாளரை  நிர்ப்பந்தித்து வெறும் கைகளால் கழிவு நீரை  அகற்ற வைத்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் எபினேசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எபினேசரை கைது செய்ய வேண்டும், திமுக சாதி ஆதிக்கம் உள்ள கட்சியாக உள்ளது. 

திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் , சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக  நான் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை அனுப்பி இருந்தேன். ஈஷாவில் இருந்த பெண்கள் மரணமடைந்தது  குறித்து முத்தரசன் கருத்துகளை தெரிவித்துள்ளார் , அங்கு இருந்த பெண்கள் காணாமல் போனது குறித்து தமிழக அரசின் கட்டப்பட்டில் உள்ள காவல்துறையிடம் முத்தரசன் முறையிடலாம். பெண் காவலரிடம் தவறாக நடந்தவர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து  முதல்வரிடம் ஏன்? எந்த செய்தி நிறுவனங்களும் கேள்வி கேட்கவில்லை. கமலாலயத்திற்கு வந்தால் வந்தும் அனைவருக்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. 

என்னிடம் இங்கு கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரின் மீதும் 2.63 லட்சம்  தமிழக அரசின் கடன் இருக்கிறது. ஆதார் இருக்கும்போது புதிதாக மாநில அரசு மக்கள் ஐடியை ஏன் வழங்க வேண்டும்? அதனால் என்ன பயன்? திமுக கனவில் கூட  தமிழ்நாட்டை தனி நாடு ஆக்க வேண்டும் என நினைத்து பார்க்க முடியாது, அதற்கான துணிச்சல் திமுகவிற்கு கிடையாது. யாரிடமோ காசு வாங்கி கொண்டு மக்கள் ஐடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். திமுக அமைச்சர் ஒருவரின்  பாலியல் வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது , அதை 48 மணி நேரத்திற்கு பிறகு எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை. பாவாடை நாடாவை அவிழ்த்து பார்ப்பேன் என சொன்னவர்கள் , ஒரு கட்சி தலைவியின் முடியை பிடித்து இழுத்தவர்கள்தான் திமுகவினர்” எனக் கூறினார்.