×

காவல்துறை லத்தியை பூஜை செய்யவா வைத்திருக்காங்க?- அண்ணாமலை

 

காவல்துறையினரின் லத்தி பூஜை செய்வதற்காக? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கும் நிகழ்ச்சியில்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை தான் உள்ளது. காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்காக? காவல்நிலையங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துக்களை தடுக்க வேண்டும். காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். காவல்துறைக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும். காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும் அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி , பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும். 

இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம். சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற காவல்துறையினரின் நிகழ்வுகள் தவறு. மேலாதிகாரிகளின் தோல்வி தான் அது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1.50க்கு மதுரை விமான நிலையம் வருகிறார். 2.20 மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமுக்கு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தமிழகம் 5 ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு உள்ளது” எனக் கூறினார்.