×

அதிமுகவை பாஜக நிர்பந்தப்படுத்தாது; அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை

 

சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு தொழில் நிறுவனங்களை இணைத்துள்ள திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதன்பின் பேசிய அண்ணாமலை, “சிவகாசி பட்டாசு உற்பத்தி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பொதுநல வழக்கு காரணமாக நிறைய பிரச்சனைகள் உள்ளது. இதன் காரணமாக பட்டாசு வெடிக்க தடை என்பது போன்ற தொடரும் பல்வேறு பிரச்சனைகளை சட்ட அமைச்சகம் மூலமாக தீர்வு காண பாஜக பட்டாசு தொழிற்சாலை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து போராடி வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் குறிப்பிட்ட தேதிகளில் பட்டாசு வெடிக்கும் போது சுற்றுச்சூழல் விதியிலிருந்துவில க்களிப்பதுபோல, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்குஅளிக்க வேண்டும். அன்றைய தின கலாச்சார தொடர்பிற்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கக்கூடாது என்ற தாரக மந்திரத்தை தமிழக பாரதிய ஜனதா கையில் எடுத்துள்ளது. 

இதற்கென மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுத்து 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் வீட்டில் தீப ஒளி விளக்கு ஏற்ற பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது வாகன போக்குவரத்தினால் கூட ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டியது சமுதாயத்தின் கடமை. உச்சநீதிமன்ற உத்தரவின் படி பசுமை பட்டாசு உற்பத்தி செய்து விற்பனை செய்வதையும் கூட, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு என்ன கூறுவது வேதனை அளிக்கிறது. பழனி மலை முருகன் சிலையை வடிவமைத்த போகர் காலத்திலிருந்து பட்டாசு இருந்துள்ளது,பண்டைய கால வரலாறு மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்புள்ள காலத்தில் கலாச்சார வெளிப் பாடாகத்தான் பட்டாசு இருந்துள்ளது. 

இந்து பண்டிகை என்பது சனாதான தர்மத்தின் வெளிப்பாடாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஒரு நாள் பட்டாசு வெடித்தால் மாசு ஏற்படும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பஞ்சாப், அரியானா  மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது பட்டாசு வெடிப்பதை விட 10 மடங்கு காற்றில் மாசு கலந்து கூடுதலாக உள்ளது. தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கு ஆதரவாக இருப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. மத்திய அரசை பொருத்தவரை பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முழு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும். அதிமுகவை பாஜக நிர்பந்தப்படுத்தாது. கட்சியின் தொண்டர்கள் விருப்பப்படி 2024 ம் ஆண்டு உள்ள அதிமுகவுடன் பாஜக கூட்டணி பயணம் தொடரும். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து நீண்ட அனுபவம் கொண்ட சிகாமணி தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்று இருப்பதை தமிழக அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதற்காக தவறு என கூற மாட்டேன். அந்த தலைமையின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்த்து அவர்களின் பணி எப்படி இருக்கிறது என்பதை கருத்து கூறுகிறேன். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூறி வரும் அக்கட்சிக்கு 40க்கு 40 என்பது 15 க்கு 15 கூட கிடைக்காது. அதாவது அரசியல் கட்சி சாராதவர்கள் கூட பால் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக கூறி, பாஜக சார்பாக வருகிற 15 ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” எனக் கூறினார்.