×

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து அன்புமணி 2வது நாளாக நடைபயணம்

 

கடலூர் மாவட்டத்தில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டாவது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். 

என்.எல்.சி நிறுவனத்தை கடலூர் மாவட்டத்தைவிட்டு வெளியேற்ற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுச்சி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை அவர் இந்த நடைபயணம் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.  அதன்படி நடைபயணத்தை வடலூரை அடுத்த வானதிராயபுரத்தில் நேற்று தொடங்கினார். தொடர்ந்து தென்குத்து, வடலூர், மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிளிக்கும் வழியாக ஆதண்டார்கொல்லையில் தனது முதல் நாள் நடைபயணத்தை நிறைவு செய்தார். 

இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது நடைபயணத்தை மேல்வளையமாதேவி கிராமத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கினார். இதைத் தொடர்ந்து கீழ்வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மும்முடிச்சோழகன் கிராமத்தில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.