×

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு- முதல்வர் மீது நம்பிக்கை உள்ளது; போராட்டம் தேவைப்படாது- அன்புமணி ராமதாஸ்

 

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் முதல்வர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது போராட்டம் தேவைப்படாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜா வன்னியர் இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்த தியாகிகளின் வீர வணக்க நாள் கூட்டம் மேற்குமாவட்ட செயலாளர் எம்.கே .முரளி தலைமையில் நடைபெற்றது இதில் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே,மணி, மாநில நிர்வாகிகள் இசக்கிபடையாச்சி,.தீரன்,பு,தா,அருள்மொழி,என்.டி,சண்முகம்,மற்றும் நிர்வாகிகள் அ.,ம.கிருஷ்ணன் .சக்கரவர்த்தி, சரவணன் ,இளவழகன்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மருத்துவர்,ராமதாஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு கட்டாயம் எங்களுக்கு கிடைக்கும் இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரிடம் இட ஒதுக்கீடு குறித்து பேசிய போது இட ஒதுக்கீட்டை தருவதாக உறுதியளித்தார் அவர் அளித்துள்ள உறுதி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது இதனால் இட ஒதுக்கீட்டிற்காக போராட வேண்டிய அவசியம் இருக்காது கண்டிப்பாக இட ஒதுக்கீடு கிடைத்துவிடும் கருப்பு மாவட்டமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அப்போது இருந்தது இதற்காக அப்போது பல கட்ட போராட்டங்களை பாமக நடத்தியது எப்போதும் போராட்டம் குணம் உள்ளவன் இந்த ராமதாஸ் இப்போதும் போராட தயாராக உள்ளேன் இம்மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரித்ததும் பாமக தான் சமூக நீதிக்காக பல போராட்டங்கள் நடந்தாலும் உலக அளவில் இட ஒதுக்கீட்டிற்காக பாமக நடத்திய 7 நாள் சாலை மறியல் போராட்டம் தான் பெரிய போராட்டம் என்று பேசினார் முன்னதாக வி.சி மோட்டூரில் பாமக கொடியையும் மருத்துவர் ராமதாஸ் ஏற்றி வைத்தார் மேலும் இந்த  பாமக கூட்டத்தில் இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது