×

பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வேண்டும் - அன்புமணி

 

பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது! பகுதி நேர ஆசிரியர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.



அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது தான் நியாயமாகும்! பகுதி நேர ஆசிரியர்களின் நிலைமையை உணர்ந்து அவர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.  அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.