×

 தூத்துக்குடி துணை ஆட்சியராக பொறுப்பேற்றார் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்.. 

 


நடிகர் சின்னி ஜெயந்தின் மகனும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஸ்ருதன் ஜெய் நாராயணன் இன்று திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  

1980 மற்றும் 1990 களில் ஏராளமான படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சின்னி ஜெயந்த். சினிமாவிற்காக கிருஷ்ணமூர்த்தி நாராயணன் என்கிற தனது பெயரை  சின்னி ஜெயந்த் என மாற்றிக் கொண்ட இவர் இயக்குநர்,  தயாரிப்பாளர், நகைச்சுவை  நடிகர், மிமிக்ரி கலைஞர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வந்தவர்.  ஏராளமான படங்களில் ஹீரோவிற்கு நண்பன் போன்ற  முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்து புகழ்பெற்றவர்.
 
பலரும் தங்கள் ஃபீல்டில் இருக்கும்போதே, தங்களது பிள்ளைகளை சினிமாவில் களமிறக்க முயற்சிக்கும் நிலையில், நடிகர் சின்னி ஜெயந்த தனது மகனை  கலெக்டராக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  ஆம், நடிகர் சின்னி ஜெய்ந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி, நாட்டிலேயே 75வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார்.  இதனையறிந்த நடிகர்  ரஜினிகாந்தும்,  உடனடியாக ஸ்ருத்ன் ஜெய்யை அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதுமே பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்றுவந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு,  அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றுக் கொண்டபின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் , “ எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி. ” என்று தெரிவித்தார்.