×

மின்வெட்டு பிரச்சனையில் மத்திய அரசை குறை கூற கூடாது - டிடிவி தினகரன்

 

மின்வெட்டு பிரச்சனையில் தமிழக அரசு மத்திய அரசை குறை கூற கூடாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனைகளை அந்த அந்த மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்டியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது: துணைவேந்தர்களை ஆளுநர் தான் நியமனம் செய்யும் முறை உள்ளது. ஆனால் திமுக இந்த முடிவை எதிர்த்து உள்ளது. 1999ல் கூட்டணி ஆட்சியில் இருந்த போது எல்லாம் செய்யாமல் திராவிட மாடல் என்று கூறி தற்பொழுது செய்கிறார்கள். ஆளுநரின் இந்த விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவை பொறுத்து உள்ளது. 

சங்கர மடத்தின் மடாதிபதி ஜெயந்திரர் சால்வையை தெலுங்கான கவர்னருக்கு அளித்த விதத்தில் எனக்கு எந்த ஆட்சயபனையும் இல்லை. ஆளுனருக்கே அதில் பிரச்சனை இல்லை என்றால் அதில் நான் கூற ஒன்றும் இல்லை. எனவும் எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. நான் சங்கர மடம் சென்றாலும் சால்வையை அப்படி தான் வாங்கிக்கொள்வேன். எனக்கு அதில் பிரச்சனை இல்லை என்றார். மின்வெட்டு பிரச்சனையில் தமிழக அரசு மத்திய அரசை குறை கூறக் கூடாது. நாடாளுமன்றத்திலும் திமுக பெரும்பான்மை பெற்று உள்ளது.. சட்டமன்றதிலும் மக்கள் அதிக பொறுப்பை வழங்கி உள்ளனர். அதை உணர்ந்து மின்வெட்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.   2024 நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடுவது தொடர்பாக மக்களை சந்திப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.