×

அதிமுக அலுவலக வழக்கு - சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!!

 

அதிமுக அலுவலக வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்திருந்தார். இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். 

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அதிமுக கலவர வழக்கு  விசாரணை சிபிசிஐடி வசம்  சென்றது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஜூலை 11ஆம் தேதி நடந்த மோதல் பற்றி விசாரிக்கும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.