×

நாளை பாஜகவினரை சந்தித்து ஆதரவு கேட்க அதிமுக முடிவு

 

நாளை பாஜகவினரை சந்தித்து ஆதரவு கேட்க அதிமுக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1800 425 94890 என்ற இலவச தொடர்பு எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் கூறி அறிவித்துள்ளார்.  

வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜிகே வாசன் இன்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ள நிலையில், ஆதரவு கேட்டு பாஜக நிர்வாகிகளை  சந்திக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பாஜக நிர்வாகிகளை சந்திக்க உள்ளனர். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.