×

இரண்டு நாள் மழைக்கே தாக்குபிடிக்காத முதல்வரின் கொளத்தூர் தொகுதி- ஜெயக்குமார்

 

சென்னை புளியந்தோப்பில் கனமழையால் பால்கனி இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். 

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “மழை வந்தவுடன் தண்ணீர் வடிந்த மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றனர்.  2 நாள் மழைக்கே முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் தண்ணீர் நிற்கிறது. பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்னும் 6 நாட்கள் மழை உள்ளது. ஆனால் இந்த 2 நாட்கள் மழைக்கே ஆங்காங்கே மழைநீர் தேங்கிநிற்கிறது. மாம்பலம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.வடசென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிய முதலில் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பிறகே மருத்துவ முகாம் நடத்த வேண்டும். 


வெள்ள பாதிப்பைத் தடுக்க, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்த 1980 சாலைகளில், 1,117 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைக்க திட்டமிட்டது அதிமுக அரசுதான். அதற்காக'ஜைக்கா' எனப்படும் ஜப்பான் நிதி நிறுவனத்திடம் கடன் கேட்டு விண்ணப்பித்தது அதிமுக அரசு தான். ஆனால் விடியா அரசு, பில்டப் மட்டும் பெரிதாக கொடுக்கின்றனர். தீயணைப்பு, பேரிடர் மேலாண்மைத்துறையை முடுக்கிவிட வேண்டும். ஆனால் யாருமே விழிப்புடன் இல்லை. ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றவேண்டும். ஆனால் உதவி அறைக்கு போன் செய்தால் போனை எடுக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.