×

தொடர்பை துண்டித்த கள்ளக்காதலியின் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த இளைஞர்

 

சென்னை ஆர் கே நகரில்  கள்ளக் காதலியின் இரு குழந்தைகளுக்கு கள்ளக்காதலன் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கொருக்குப்பேட்டை  பாரதி  நகர்  குடிசை மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் ரசூல். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வயதுடைய ஸ்டீபன் மற்றும் ஏழு வயதுடைய ஆல்பர்ட் என இரு  குழந்தைகள்  உள்ளனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வடபெரும் பாக்கம்  பகுதியைச்  சேர்ந்த  35 வயதுடைய ராஜேஷ்க்கும்  கவிதாவுக்கும்  பழக்கம்  ஏற்பட்டு பழகி வந்தனர். இதனால் நடத்தையில் சந்தேகம்  அடைந்த  ரசூல் மனைவி கவிதாவை  விட்டு  பிரிந்து  சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக ராஜேஷ் கவிதாவிடம் கள்ள தொடர்பு  ஏற்பட்டு அடிக்கடி  கவிதா வீட்டிற்கு வந்து  சென்றுள்ளார். குழந்தைகள்  வளர தொடங்கவே  கவிதா ராஜேஷிடம் பழகுவதை துண்டித்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த ராஜேஷ்  கவிதா வீட்டில்  இல்லாத  நேரத்தில் குழந்தைகள் ஸ்டீபன், ஆல்பர்ட் இருவருக்கும் விஷத்தை கொடுத்து  தானும்  விஷம் குடித்து தற்கொலை  செய்து கொண்டார்.

இதனையடுத்து  மூன்று  பேரையும்  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து  சிகிச்சை  பலனின்றி  ராஜேஷ் உயிரிழந்தார் .இரு குழந்தைகளும்  அரசு  ஸ்டான்லி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் ஆபத்தான  நிலையில் சிகிச்சை  பெற்று  வருகின்றனர். இச்சம்பவம் குறித்து  ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.