×

உதகை அருகே கல்லட்டி ஆற்றில் செல்பி எடுத்த இளம்பெண் உயிரிழப்பு

 

உதகை அருகே கல்லட்டி ஆற்றில் செல்பி எடுத்த போது மென்பொறியாளர் தண்ணீரில் அடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள்  நிறுவனத்தை சார்ந்த தேஜா(27) அவரது மனைவி வினித்தா சவுத்ரி(23) உள்பட 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் இன்று காலை  கல்லட்டி மலை பாதையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்து தங்கி உள்ளனர்.  அவர்கள் அனைவரும் மாலை 6.30 மணி அளவில் அங்கு ஆற்றின் குறுக்கே அமைக்கபட்டுள்ள தற்காலிக பாலத்தின் மீது நின்று செல்பி எடுத்து கொண்டிருந்த போது வினித்தா சவுத்ரி ஆற்றினுள் தவறி விழுந்துள்ளார்.

தகவல் அறிந்து சென்ற உதகை தீயணைப்பு துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தண்ணீரில் அடித்து செல்லபட்ட வினித்தா சவுத்ரியை தேடி வருகின்றனர். தேஜா மற்றும் வினித்தா சவுத்ரி ஆகியோருக்கு திருமணம் ஆகி 11 மாதங்களே ஆகிறது. அவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதி விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது.  கடந்த சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் உள்ள வேறொரு தனியார் விடுதியில் தங்குவதற்காக  கல்லட்டி மலைபாதையில் தடையை மீறி வந்த டெம்போ டிராவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் சென்னையை சார்ந்த பெண் மென்பொறியளர் பலியான நிலையில் தற்போது பெங்களூரை சார்ந்த மென்பொறியாளர் தண்ணீரில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து புதுந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.