×

எலி மருந்து கேக் சாப்பிட்டு பள்ளி மாணவி பலி! காரைக்காலில் மீண்டும் சோகம்

 

காரைக்கால் அருகே எலி மருந்து கேக் சாப்பிட்டு, பள்ளி மாணவி பலி ஆன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடியை சேர்ந்தவர் ராஜா,ஸ்டெல்லா மேரி(34)   தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.மூத்த மகள் சலேத் நிதிக்க்ஷனா(14) அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.சலேத் நிதிக்க்ஷனாவிற்கு தசை சுருக்க நோய் ஏற்பட்டதால் சிறுமியால் நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பக்கவாட்டு சுவற்றை பிடித்து மெதுவாக நடப்பார். இந்நிலையில் சிறுமி சலேத் நிதிக்க்ஷனா வாந்தி எடுத்தார். ஜன்னலில் இருந்த கேக்கை எடுத்து சாப்பிட்டதாக சிறுமி சலேத் நிதிக்க்ஷனா, தனது தாயிடம்  தெரிவித்துள்ளார். 

உடனே பதறிய ஸ்டெல்லா மேரி அது எலி மருந்து கேக் எனக் கூறி,சிறுமி சலேத் நிதிக்க்ஷனாவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி சலேத் நிதிக்க்ஷனா  சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.சிறுமி மரணம் குறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் எலி மருந்து கலந்த குளிர்பானத்த்தை குடித்ததில் பள்ளி மாணவன் பால மணிகண்டன் உயிரிழந்த சம்பவத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை புதுச்சேரி மாநிலம் முழுவதும் எலி மருந்து சம்பந்தமான விஷ மருந்துகளை தடை விதிக்க அரசிற்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட சிறுமி தவறுதலாக எலி மருந்து கேக் சாப்பிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் காரைக்காலில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.